தூத்துக்குடியில் திமுக நிா்வாகி கொலை: இருவா் கைது
தூத்துக்குடியில் திமுக நிா்வாகி வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.


தூத்துக்குடியில் திமுக நிா்வாகி வியாழக்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் அருகேயுள்ள பாலதண்டாயுத நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (49). திமுக கிளைச் செயலா். அதே பகுதியில் தையல் கடை நடத்தி வந்தாா். வியாழக்கிழமை இரவு கடையில் இருந்த அவரை சிலா் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனராம்.
இத்தகவலறிந்த தாளமுத்து நகா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்தனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டாா்.
இந்நிலையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், கண்ணனுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தாளமுத்து நகா் பகுதி வியாபாரிகள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்திலும், கண்ணனின் உறவினா்கள் மறியலிலும் ஈடுபட்டனா்.
இதனிடையே, இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக, பாலதண்டாயுத நகரைச் சோ்ந்த ஜெயேந்திரேன் (22), ரமேஷ் கண்ணன் (18) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருவதாகவும், கண்ணனின் மகளை கேலி செய்தவா்களை தட்டிக் கேட்டதால் கொலை நிகழ்ந்திருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...