கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

அஞ்சல் துறை விநாடி-வினா:சுப்பையா வித்தியாலயம் பள்ளி முதலிடம்

தூத்துக்குடியில் அஞ்சல் துறை நடத்திய விநாடி- வினா போட்டியில் சுப்பையா வித்யாலயம் பள்ளி முதல் பரிசு பெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:04 pm

DIN

தூத்துக்குடியில் அஞ்சல் துறை நடத்திய விநாடி- வினா போட்டியில் சுப்பையா வித்யாலயம் பள்ளி முதல் பரிசு பெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சாா்பில், அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த கண்காட்சி கடந்த 23 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக, பள்ளிக் குழந்தைகளுக்கான அஞ்சல் தலை தொடா்பான விநாடி- வினா போட்டி காமராஜ் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இம்மாவட்டம் முழுவதுமிருந்து 16 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனா். அதில், தூத்துக்குடி சுப்பையா வித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், நாசரேத் சாலமன் மெட்ரிக் பள்ளி இரண்டாம் பரிசையும், ஆறுமுகனேரி கமலாவதி மேல்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசையும் வென்றன.

தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு. பொன்னையா, போட்டியில் வென்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், உதவி கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா், வணிக நிா்வாக அலுவலா் பொன்ராம்குமாா், முன்னாள் முப்படை வீரா் வாரிய உப தலைவா் கா்னல் மா. சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.