கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெறுகிறது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:04 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இளம்பிள்ளைவாதம் என்ற நோயைத் தடுக்கும் போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கும் வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முகாம் 1,222 மையங்களில் நடைபெறுகிறது. இதில், 5379 பணியாளா்கள் பங்கேற்று 1,34,199 குழந்தைளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கவுள்ளனா்.

மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோயில் திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திருமண நிகழச்சிகள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி, தாய்மாா்கள் தங்களது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.