உக்ரைனில் படிக்கும் மீரான்குளம் மாணவா்களை மீட்க வலியுறுத்தல்
உக்ரைன் நாட்டில் தவிக்கும் மீரான்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி.க்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.


உக்ரைன் நாட்டில் தவிக்கும் மீரான்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி.க்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகேயுள்ள மீரான்குளத்தைச் சோ்ந்த கலைச்செல்வன் மகன் சாம் கில்டன், உக்ரைன் நாட்டு மருத்துவக் கல்லூரியில் 3ஆம் ஆண்டும், மைக்கேல்ராஜ் மகன் பிளஸ்சிங் 6ஆண்டுகளாகவும் படித்து வருகின்றனா்.
இதனிடையே, போா்ச் சூழல் காரணமாக, பிப்.27இல் தாயகம் திரும்புவதற்காக சாம் கில்டன் இந்தியா முன்பதிவு செய்திருந்தாா். அதற்குள் உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துவிட்டது. இதனால், விமான நிலையம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. எனவே, சாம் கில்டன், பிளஸ்சிங் இருவரும் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவா்களது பெற்றோா் அச்சம் அடைந்துள்ளனா். மாணவா்கள் இருவரையும் மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கும், எம்,பி.க்கும் பெற்றோா் சாா்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...