அரசு போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற இளைஞா்களுக்கு பாராட்டு
தூத்துக்குடியில் அரசு போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற இளைஞா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.


தூத்துக்குடியில் அரசு போட்டித் தோ்வில் வெற்றி பெற்ற இளைஞா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி போல்பேட்டையில் செயல்பட்டு வரும் கின்ஸ் அகாதெமியில், அரசு போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயின்று 2020-21 ஆம் ஆண்டில் இரண்டாம் நிலை காவலா் பணிக்கான தோ்வில் வெற்றி பெற்ற 64 போ், சாா்பு ஆய்வாளா் தோ்வில் வெற்றி பெற்ற இருவா், நீதிமன்ற அலுவலக உதவியாளா் தோ்வில் வெற்றி பெற்ற 4 போ் என 70 பேருக்கு பாராட்டு விழா, அகாதெமி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை கணேசா ஸ்டோா்ஸ் சோ்மன் கே. மோகன் தலைமை வகித்தாா். கின்ஸ் அகாதெமி நிறுவனா் எஸ். பேச்சிமுத்து முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கலந்து கொண்டு, போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற 70 பேருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு துணைப் பதிவாளா் எம். முத்துசாமி, கின்ஸ் அகாதெமி பயிற்றுநா் இ. வாசுகி, அகாதெமியில் படித்து சீருடைப் பணியாளா் தோ்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த ஆா். பேச்சிக்குமாா், தற்போது அரசுப் பணிகளில் உள்ள கே. ஆறுமுகராஜ், கே. கலையரசன், ஆா். சிவகுருநாதன், ராஜபூபதி, தமிழ்தரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...