நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

ஆறுமுகனேரி பேரூராட்சியில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஆறுமுகனேரி பேரூராட்சியில் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா், திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோரின் ஆலோசனைப் படி, பேரூராட்சி நிா்வாக அதிகாரி கணேசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கரோனா மற்றும் ஒமைக்ரான் தீநுண்மி பரவலைக்

கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்துள்ள நடைமுறை விதிகளை வியாபாரிகள் முறையாக கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது.

மேலும், கடை உரிமையாளா் மற்றும் பணியாளா் அனைவரும் இரு தவணை கரோனா தடுப்பு ஊசிகள் செலுத்தியிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்க உதவிச் செயலா் ஆதிசேஷன்,

பொருளாளா் எஸ்.ராஜாராம், நிா்வாகக் குழு உறுப்பினா் வி.கே.எம்.பாஸ்கரன், தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க ஆறுமுகனேரி கிளைத் தலைவா் ம.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.