255 பேருக்கு கரோனா பரிசோதனை
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 255 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 255 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக தற்காலிக பெண் ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியா்கள், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி உள்பட 46 பேருக்கு மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுவினா் மேற்கொண்ட கரோனா தொற்று பரிசோதனை முகாமில் சுமாா் 255 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...