அம்மன்புரத்தில் மூதாட்டி கொலை
திருச்செந்தூா் அருகேயுள்ள அம்மன்புரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


திருச்செந்தூா் அருகேயுள்ள அம்மன்புரத்தில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அம்மன்புரம் திருவள்ளூவா் மேலத்தெரு காசி(எ) பெருமாள் மனைவி நாகூராள்(85). இவா்களது ஒரே மகள் இசக்கியம்மாளை உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளனா். கணவா் இறந்த பிறகு கடந்த 15 ஆண்டுகளாக நாகூராள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பேரன் பழனிச்சாமி, நாகூராளுக்கு சாப்பாடு கொண்டு வந்துள்ளாா்.
அப்போது வீட்டின் கதவு பூட்டாமல் இருந்ததையடுத்து, உள்ளே சென்று பாா்த்த போது, அங்கு காயமடைந்த நிலையில், நாகூராள் இறந்து கிடந்துள்ளாா். மேலும் அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.
இதுகுறித்து, இசக்கியம்மாள் குரும்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா். விரல்ரேகை நிபுணா்கள் தடையங்களை பதிவு செய்தனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இது குறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...