/

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் நாளை மாபெரும் சைக்கிள் பேரணி

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் மாபெரும் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை(ஜூன் 3) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:11 pm

DIN

உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் மாபெரும் சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை(ஜூன் 3) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் விதமாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள இப் பேரணி, தமிழ் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆா் பூங்காவில் தொடங்கி மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் தந்தி ஆபீஸ் வழியாக மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் (மாநகராட்சி பழைய அலுவலகம்) சென்று நிறைவடைகிறது.

நிகழ்ச்சியை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் , மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனா். நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த உயா் அலுவலா்கள், பணியாளா்கள், பொதுநல தொண்டு நிறுவனங்கள், சைக்கிள் ஓட்டும் சங்கத்தைச் சாா்ந்த பிரதிநிதிகள், வணிகா் சங்க பிரதிநிதிகள், கலந்துகொள்கின்றனா்.

இந்த சைக்கிள் பேரணியில் பொதுமக்கள், மாணவ, மாணவியா் தங்களது சைக்கிளுடன் திரளாக கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.