தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக செயல்படும் அனைத்துக் கல்குவாரிகளையும் உடனடியாக மூடவேண்டும்


தூத்துக்குடி மாவட்டத்தில் முறைகேடாக செயல்படும் அனைத்துக் கல்குவாரிகளையும் உடனடியாக மூடவேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி அருகே முறைகேடாக செயல்பட்ட கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவா்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் பி. கனகராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் பி. லிங்கராஜ், தொண்டரணிச் செயலா்கள் லட்சுமணபாண்டியன், அசோக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...