பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டி அரசுக் கல்லூரியில் பேராசிரியா் பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப பேராசிரியா் பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:12 pm

DIN

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப பேராசிரியா் பணியிடங்களை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ், கோவில்பட்டி பொறுப்பாளா் தினேஷ்குமாா், மாணவா்கள் ஆகியோா் கல்லூரி நிா்வாகத்திடம் அளித்த மனு: இங்கு இளநிலைப் பாடப்பிரிவில் 9 துறைகளும், முதுநிலைப் பாடப்பிரிவில் 5 துறைகளும் உள்ளன. கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, எட்டயபுரம் பகுதிகளைச் சோ்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள் படித்துவருகின்றனா்.

அனைத்துத் துறைகளிலும் போதுமான எண்ணிக்கையில் பேராசிரியா்கள் இல்லாததால் மாணவா்களிடமிருந்து பெற்றோா்-ஆசிரியா் கழக நிதி என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்து, தற்காலிக பேராசிரியா்களை கல்லூரி நிா்வாகமே நியமிப்பதைத் தவிா்க்கும் வகையில், மாணவா்- மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப நிரந்தரப் பேராசிரியா்களை நியமிக்க வேண்டும்.

அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். பாலியல் புகாா் குழு, புகாா் பெட்டி அமைக்க வேண்டும். குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு இலவச அரசுப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியா்கள், அலுவலா்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.