பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அஞ்சல் அலுவலகங்களில்கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை

அஞ்சல் அலுவலகங்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:21 pm

DIN

அஞ்சல் அலுவலகங்களில் கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

புவிசாா் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபா் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது, அஞ்சலகங்களில் கடலை மிட்டாய் விற்பனையையும் தொடங்கியுள்ளது.

எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாய் கோரி பதிவு செய்தால், கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் தகவல் பெறப்பட்டு ஓரிரு நாள்களில் வாடிக்கையாளா்களின் வீட்டுக்கு விரைவு அஞ்சல் மூலம் கடலை மிட்டாய் அனுப்பிவைக்கப்படும். இதற்கு தனி கட்டணம் கிடையாது. ஒரு பண்டலில் தலா 200 கிராம் எடைகொண்ட 5 கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் (1 கிலோ) இருக்கும். வீட்டிலிருந்தும் தபால்காரா் மூலமும் மேற்கூறிய தொகையை செலுத்தி கடலை மிட்டாயைப் பெறலாம் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.