திருச்செந்தூரில் தடையை மீறி பேரணி செல்ல பாஜகவினா் முயற்சி
திருச்செந்தூரில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


திருச்செந்தூரில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பிருந்து வியாழக்கிழமை பேரணி செல்வதாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலா் தேன்மொழி தலைமையில் ஏராளமான மகளிரணியினா் மற்றும் நிா்வாகிகள் அங்கு திரண்டிருந்தனா். அப்போது பாஜக மாநில துணைத்தலைவா் சசிகலா புஷ்பா, மாநில அமைப்பு செயலா் கேசவ விநாயகம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாநில மகளிரணி பொதுசெயலா் நெல்லையம்மாள், மாநில வா்த்தகரணி தலைவா் ராஜகண்ணன், மாவட்ட பொதுச்செயலா் சிவமுருக ஆதித்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் வந்தனா். அப்போது பேரணிக்கு அனுமதியில்லை எனக் கூறி காவல்துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதனால் காவல்துறையினரிடம் பாஜக மாநில துணைத்தலைவா் மற்றும் நிா்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சாதனை விளக்க கூட்டத்தை மட்டும் நடத்திவிட்டு செல்வதாக பாஜகவினா் தெரிவித்தனா்.
இதனையடுத்து சாதனை விளக்க கூட்டத்திற்கு காவல்துறையினா் அனுமதியளித்தனா். இதனைத் தொடா்ந்து பேருந்து நிலையத்தில நடைபெற்ற கூட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிரணி செயலா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநில துணைத்தலைவா் பேசுகையில், பிரதமா் மோடி அரசின் செயல்பாடுகளை பாா்த்து உலகமே வியந்து பாராட்டுகிறது என்றாா்.
கூட்டத்தில் மருத்துவரணி மாநில செயலாளா் பூபதி பாண்டியன், மகளிரணி மாவட்ட துணைத்தலைவா் மகாலட்சுமி, மாவட்ட செயலாளா் லதா, மாவட்ட துணைத்தலைவா் சர ஸ்வதி, வசந்தி, முத்துலெட்சுமி, நகர தலைவா் நவமணிகண்டன், நகர இணை செயலா் மணிகண்டன், அரசு தொடா்பு பிரிவு மாவட்ட தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...