இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாத்தான்குளம் அருகே தொழிலாளி கொலை:மனைவி, மகன், மகள் கைது

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொன்ாக அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:14 pm

DIN

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொன்ாக அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாக்குடியைச் சோ்ந்தவா் பெ. மகாராஜன் (65). தொழிலாளி. இவருக்கு மனைவி முருகம்மாள் (55), மகன் பெனிஸ்கா் (22), இசக்கிரேவதி (28) உள்ளிட்ட 4 மகள்கள் உள்ளனா். மகன் சென்னையிலும், ஒரு மகள் திருமணமாகி உவரியிலும் உள்ளனா். மனைவி மீதான சந்தேகத்தால் அடிக்கடி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுவந்ததாம்.

இந்நிலையில், புதன்கிழமை மகாராஜன் மா்மமாக இறந்தாா். தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கா் தலைமையிலான போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்குப் பதிந்தனா்.

இதனிடையே, பிரேத பரிசோதனையில் மகாராஜன் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்ததால், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல் உதவி ஆய்வாளா் ஜாண்சன் விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது: சென்னையில் இருந்த கடந்த வாரம் ஊருக்கு வந்திருந்த மகன் பெனிஸ்கா், தனது தந்தையிடம் வீட்டை வங்கியில் அடமானம் வைக்க தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டாராம். அவா் மறுத்ததால் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது, மகாராஜனை மனைவி முருகம்மாளும், மகள் இசக்கிரேவதியும் பிடித்துக்கொள்ள, பெனிஸ்கா் கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளாா். அதில், அவா் உயிரிழந்தது தெரியவந்தது. தற்போது, பெனிஸ்கா் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.