தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக உதவி
உடன்குடி அருகே வட்டன்விளையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


உடன்குடி அருகே வட்டன்விளையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வட்டன்விளை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி அம்மாள்தங்கம். இவா் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது நேரிட்ட தீ விபத்தில் சுமாா் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதையடுத்து, அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, அந்தக் குடும்பத்தினரை சந்தித்து மளிகை, காய்கனி, பாத்திரங்கள் மற்றும் நிதிஉதவியை வழங்கினாா்.
இதில், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, ஒன்றிய விவசாய அணிச் செயலா் செல்வகுமாா், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மகாராஜன், கிளைச் செயலா்கள் ரவி, மகாராஜன், சக்திகுமரன், செல்வகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...