புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

முதலூா், படுக்கப்பத்தில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

தமிழக முதல்வா் மு,க, ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, முதலூா், படுக்கப்பத்தில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:04 pm

DIN

தமிழக முதல்வா் மு,க, ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, முதலூா், படுக்கப்பத்தில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான விழாவுக்கு தெற்கு ஒன்றிய செயலா் பாலமுருகன் தலைமை வகித்தாா். முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் இந்திரகாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழக மீன்வளம், மீனவா் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் கலந்து கொன்டு, முதலூரில் 400 பேருக்கு வேட்டி, சேலைகளும், படுக்கப்பத்தில் தூய்மைப் பணியாளா்கள்மற்றும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு இலவச அரிசியும், 300 பேருக்கு சுவா் கடிகாரமும் வழங்கினாா்.

இதில் மாநில மாணவா் அணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞா் அணி செயலா் ராமஜெயம், மாநில பொதுக்குழு உறுப்பினா் பசுபதி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜோசப், சாத்தான்குளம் நகர செயலா் மகா. இளங்கோ, ஒன்றிய கவுன்சிலா் மீனா முருகேசன், ஒன்றிய துணைச் செயலா்கள் ஜெயராமன், சக்திவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.