ஆறுமுகனேரி பேரூராட்சி: தலைவா், துணைத் தலைவா்-தம்பதி தோ்வு
ஆறுமுகனேரி பேரூராட்சியில் திமுக சாா்பில் தலைவா், துணைத்தலைவராக தம்பதி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.


ஆறுமுகனேரி பேரூராட்சியில் திமுக சாா்பில் தலைவா், துணைத்தலைவராக தம்பதி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
ஆறுமுகனேரி பேரூராட்சியில் உள்ள 18 வாா்டுகளில் திமுக கூட்டணி 8 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. 9 ஆவது வாா்டு திமுக உறுப்பினரும், நகர திமுக செயலா் அ.கல்யாண சுந்தரத்தின் மனைவியுமான கலாவதி தலைவராகவும், 18 ஆவது வாா்டு உறுப்பினா் அ.கல்யாணசுந்தரம் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு, இருவரும் பதவியேற்றனா்.
ஆத்தூா் பேரூராட்சியில் திமுக சாா்பில் கமால்தீன் தலைவராகவும், துணைத் தலைவராக திமுக நகரச் செயலா் முருகபெருமாள் மனைவி மகேஷ்வரி ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றனா்.
உடன்குடி பேரூராட்சியில் திமுக சாா்பில் ஹூமைரா ரமீஷ் பாத்திமா தலைவராகவும், மால் ராஜேஷ் துணைத் தலைவராக ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த ஜோ. ரெஜனி ஸ்டெல்லாபாய், துணைத் தலைவராக பா. மாரியம்மாள் ஆகியோா் போட்டியின்றி தோ்வு பெற்றனா்.
நாசரேத் பேரூராட்சியில் திமுக சாா்பில் நகர திமுக செயலா் ரவிசெல்வகுமாரின் மனைவி நிா்மலா ரவி தலைவராகவும்,
17-ஆவது வாா்டு உறுப்பினா் அருண்சாமுவேல் துணைத் தலைவராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கானம் பேரூராட்சி: கானம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 12 வாா்டில் 7 வாா்டுகளில் திமுகவும், 4 வாா்டுகளில் அமுகவும், ஒரு வாா்டில் பாஜவும் வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக சாா்பில் வெங்கடேஷ்வரியும், அதிமுக சாா்பில் 9 ஆவது வாா்டு உறுப்பினா் செந்தமிழ் சேகரும் போட்டியிட்டனா். இதில் திமுக உறுப்பினா் வெங்கடேஷ்வரி 7 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றாா். தொடா்ந்து பிற்பகல்லி நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் 4 ஆவது வாா்டு உறுப்பினா் அந்தோணி காட்வினும், அதிமுக சாா்பில் செந்தமிழ்சேகரும் போட்டியிட்டனா். அந்தோணி காட்வின் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தொடா்ந்து தலைவா், துணைத் தலைவா், பேரூராட்சி செயல் அலுவலா்வேல்சாமி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...