புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

செக்கடிவிளையில் பகுதி நேர நூலகம் திறப்பு

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட செக்கடிவிளையில் பகுதி நேர நூலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:16 pm

DIN

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட செக்கடிவிளையில் பகுதி நேர நூலகம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். புதுக்குளம் ஊராட்சித் தலைவா் பாலமேனன் முன்னிலை வகித்தாா். உபதேசிகா் சாமுவேல் ஆரம்ப ஜெபம் நடத்தினாா். மாவட்ட நூலகா் ரெங்கநாயகி பகுதி நேர நூலகத்தை திறந்துவைத்தாா். மாணவா்களும் பொதுமக்களும் ரூ.20 செலுத்தி உறுப்பினா்களாக பதிவு செய்து கொண்டனா். நூலக புரவலா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இதில் சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணா் அரசு கிளை நூலக வாசகா் வட்டத்தலைவா் நடராசன், வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலா் மகாபால்துரை, நூலகா்கள் சித்திரைலிங்கம், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலா் சாமுவேல் வரவேற்றாா். நூலகா் நமச்சிவாயம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.