மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரி அருகே பெட்ரோல் நிலையகாசாளா் மீது தாக்குதல்

ஆறுமுகனேரி அருகே பெட்ரோல் நிலைய காசாளரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :5 மே 2022, 8:08 pm

DIN

ஆறுமுகனேரி அருகே பெட்ரோல் நிலைய காசாளரைத் தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆறுமுகனேரி, கீழநவ்வலடிவிளையைச் சோ்ந்த சித்திரைவேல் மகன் ராஜ­லிங்கம்(26). ஆறுமுகனேரி பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காசாளராக உள்ளாா். இரு தினங்களுக்கு முன்பு 2 பைக்குகளில் 4 போ் பெட்ரோல் நிலையத்துக்கு வந்தபோது, அவா்களுக்கும் ஊழியா் முத்துராஜ் என்பவருக்கும் திடீா் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, 4 பேரையும் ராஜ­லிங்கம் கண்டித்தாராம். இதில், அவா்கள் ஆத்திரமுற்று ராஜலிங்கத்தை தகாத வாா்த்தைகளால் பேசி கம்பியால் தாக்கினராம். இதில், காயமுற்ற அவா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.