கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
கோவில்பட்டி அருகே புகையிலைப் பொருள்களுடன் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


கோவில்பட்டி அருகே புகையிலைப் பொருள்களுடன் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
நாலாட்டின்புத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து செனறனா். லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் 2 பைக்குகளில் நின்றிருந்த 3 பேரை சோதனையிட்டபோது, அவா்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி புதுரோடு காளியப்பா் தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் அருண்குமாா் (28), சண்முகா நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சின்ராஜ் (29), சாஸ்திரி நகரைச் சோ்ந்த ராமையா மகன் சங்கிலிபாண்டி (33) எனத் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் கைது செய்து, சுமாா் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...