வட்டன்விளை கோயில் கொடை விழா
பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத பெரும் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.


பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத பெரும் கொடை விழா 5 நாள்கள் நடைபெற்றது.
இத்திருக்கோயில் கொடை விழா மே 1ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது.தொடா்ந்து விழா நாள்களில் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை,புஷ்பாஞ்சலி,108 திருவிளக்கு பூஜை,108 பால்குட ஊா்வலம், 301 சுமங்கலி பூஜை, கோலாட்டம், கரகாட்டம்,வாகன பவனி மஞ்சள் நீராட்டு, வில்லிசை,சிறப்பு அன்னதானம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 4 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல், இரவு 8 மணிக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சியும், தொடா்ந்து வரிதாரா்களுக்கு வரிபிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா் மற்றும் ஊா்மக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...