பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி புதுகிராமம் பிரதான சாலையில், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 7:25 pm

DIN

கோவில்பட்டி புதுகிராமம் பிரதான சாலையில், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாதா் சம்மேளன நகரச் செயலா் கோமதி தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் ரஞ்சிதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், நகரச் செயலா் சரோஜா, வட்டச் செயலா் பாபு ஆகியோா் பேசினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.