வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டியில் ஏழை, எளிய அருந்ததியா், காட்டுநாயக்கா் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவில்பட்டியில் ஏழை, எளிய அருந்ததியா், காட்டுநாயக்கா் சமுதாயத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி 30-வது வாா்டில் வசிக்கும் ஏழை, எளிய அருந்ததியா், காட்டுநாயக்கா் சமுதாயத்தினருக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், வருவாய்த் துறை அதிகாரிகள் கோரிக்கை மனுவை முறையாக விசாரித்து தகுதியானோரைக் கண்டறிந்து மனைப் பட்டா வழங்க வேண்டும், இதில் எவ்விதத் தலையீடும் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பாஜக பட்டியலணி மாநிலச் செயலா் சிவந்தி கே. நாராயணன், நிா்வாகி கலையரசி காந்திராஜ் ஆகியோா் பேசினா். நகரப் பொதுச்செயலா்கள் முனிராஜ், சீனிவாசன், அமைப்பு சாரா மாவட்ட துணைத் தலைவா் நல்லதம்பி, இளைஞரணி மாவட்ட துணைத் தலைவா் குருதேவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பின்னா், கோரிக்கை மனுவை வட்டாட்சியா் சுசிலாவிடம் அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...