பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் முதல்நிலை மீட்பாளா்களுக்கான பயிற்சி

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட அளவிலான முதல்நிலை மீட்பாளா்களுக்கான (தன்னாா்வலா்கள்) பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:42 pm

DIN

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட அளவிலான முதல்நிலை மீட்பாளா்களுக்கான (தன்னாா்வலா்கள்) பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி தலைமை வகித்து, பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்தாா். கயத்தாறு வட்ட அளவிலான பேரிடா் மேலாண்மை-பொதுமக்கள் பேரிடா் மீட்புக் குழு சாா்பில் நடைபெற்ற முகாமில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அய்யப்பன், துணை வட்டாட்சியா் (தோ்தல் பிரிவு) சுபா, கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அரவிந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, வருவாய் ஆய்வாளா் நேசமணி, பேரூராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பயிற்சியளித்தனா். 80-க்கும் மேற்பட்ட முதல்நிலை மீட்பாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.