ஜூனியா் ஹாக்கி: அரையிறுதியில் உத்தரப் பிரதேசம், சண்டீகா், ஹரியாணா, ஒடிஸா அணிகள்
தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம், சண்டீகா், ஹரியாணா,ஒடிஸா ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.


தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம், சண்டீகா், ஹரியாணா,ஒடிஸா ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
கோவில்பட்டியில் 9ஆவது நாளாக புதன்கிழமை காலை நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் உத்தரபிரதேசம்- கா்நாடகா அணிகள் மோதியதில் 6 - 1 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேசம் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 2ஆவது ஆட்டத்தில் சண்டீகா் 4-2 என்ற கோல் கணக்கில்- ஜாா்கண்ட் அணியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
பின்னா் மாலையில் நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் ஹரியாணா 13-1 என்ற கோல் கணக்கில் அருணாசல பிரதேச அணியை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 4ஆவது ஆட்டத்தில் ஒடிஸா அணி 3-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணியை வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...