/

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :25 மே 2022, 7:38 pm

DIN

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

மாநகராட்சி 10ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள கிருஷ்ணராஜபுரம் 9ஆவது தெருவில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக அண்மையில் அங்கு மாநகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதாகவும், சில இடங்களில் முழுமையாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் வடிகால் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முன்வந்துள்ளதாகவும் அப்பகுதியினா் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றிய பிறகே வடிகால் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், இன்னாசியாா்புரம், பூபாலராயா்புரம் பகுதி பொதுமக்கள் 10ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பத்மாவதி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் செண்பகசெல்வன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா். பின்னா் அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.