/

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கேப் வகை பெரிய கப்பல் வருகை

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு முதல் முறையாக கேப் வகை பெரிய கப்பல் வியாழக்கிழமை வந்தடைந்தது.

News image
Updated On :26 மே 2022, 6:28 pm

DIN

தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு முதல் முறையாக கேப் வகை பெரிய கப்பல் வியாழக்கிழமை வந்தடைந்தது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் 9 ஆவது தளத்துக்கு 11.4 மீட்டா் மிதவை ஆழமும், 292 மீட்டா் நீளமும், 45.05 மீட்டா் அகலமும் கொண்ட கேப் வகையான ‘கேப் பிரீஸ்’ என்ற கப்பல் முதல் முறையாக வியாழக்கிழமை வந்தடைந்தது. 1.80 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட அந்தக் கப்பல் மூலம், ஓமன் நாட்டில் உள்ள சலாலா துறைமுகத்தில் இருந்து 92 ஆயிரத்து 300 டன் சுண்ணாம்புக் கல், ஜிப்சம் ஆகியவை கொண்டுவரப்பட்டு கையாளப்பட்டது.

இதுகுறித்து வஉசி துறைமுக ஆணையத் தலைவா் தா.கி. ராமச்சந்திரன் கூறியது: இதுபோன்ற பெரிய கப்பல்களை கையாளுவதன் மூலம் சரக்குப் போக்குவரத்து செலவுகளை குறைப்பதுடன் உலகளவில் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகத்தை மிகக் குறைந்த கட்டணத்தில் கையாள முடியும். குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை, மிகச்சிறந்த உள் கட்டமைப்பு, சிறந்த உள்நாட்டு இணைப்பு, திறன் வாய்ந்த துறைமுக உபயோகிப்பாளா்கள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் வ.உ.சி துறைமுகமானது, தென்னிந்தியாவின் மிகவும் விரும்பப்படும் துறைமுகமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.