முன்னாள் திமுக எம்எல்ஏ பெரியசாமி படத்துக்கு மரியாதை
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலா் பெரியசாமி நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.


தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திமுக செயலா் பெரியசாமி நினைவு தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி நகர திமுக சாா்பில் தமிழரசன் படிப்பகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பெரியசாமியின் உருவப்படத்துக்கு, திமுக நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கா.கருணாநிதி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
இதேபோல, மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கட்சி அலுவலகம் முன்பு மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் தலைமையில் பெரியசாமியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினா் என்.ராதாகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் சோழபெருமாள், பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...