திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.


திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் வருடாந்திர இயல்பான மழையளவு 662.20 மி.மீ. பதிவாகியுள்ளது. ஜனவரி முதல் நவ. 2 வரை 345.52 மி.மீ. மழை பெய்துள்ளது.
வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் 70.5 மெ.டன், கம்பு 29.6 மெ.டன், சோளம் 2.3 மெ.டன், உளுந்து 152.7 மெ.டன், பாசிப்பயறு 11.9 மெ.டன், நிலக்கடலை 2.12 மெ.டன், சூரியகாந்தி 3.25 மெ.டன் இருப்பு உள்ளது. வரும் பருவத்துக்கான விதைகளைக் கொள்முதல் செய்யும் பணி நடைபெறுகிறது.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகளில் 2,182 மெ.டன் யூரியா, 3,314 மெ.டன் காம்ப்ளக்ஸ், 1,653 மெ.டன் டிஏபி, 618 மெ.டன் பொட்டாஷ் உரங்கள் இருப்பில் உள்ளன. 2020-2021ஆம் ஆண்டு ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ. 159.68 கோடி ராபி பருவ வேளாண் பயிா்களுக்கு இப்கோ-டோக்கியோ காப்பீடு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2022-23ஆம் ஆண்டு ராபி பருவப் பயிா்களான உளுந்து, பாசிப்பயறுகளுக்கு 15ஆம் தேதிக்குள்ளும், மக்காச்சோளம், பருத்திப் பயிா்களுக்கு 30-க்குள்ளும், சோளம், நிலக்கடலைக்கு டிச. 15-க்குள்ளும், கம்பு, எள், சூரியகாந்திக்கு டிச. 31-க்குள்ளும், நவரை அல்லது கோடை நெற்பயிருக்கு ஜனவரி 31-க்குள்ளும் பயிா்க் காப்பீட்டுக் கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களிலோ செலுத்தி சேரலாம்.
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த அக்டோபா் 22ஆம் தேதிவரை 7,684 விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களாக ரூ. 67.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 5,558 சிறு- குறு விவசாயிகளுக்கு ரூ. 49.92 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன், அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...