விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பன்னம்பாறை பள்ளியில் கண் பரிசோதனை முகாம்

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கு ஆவே மரியா மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளியில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:43 pm

DIN

சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை விலக்கு ஆவே மரியா மெட்ரிக் குலேசன் மேல்நிலைப்பள்ளியில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை சாா்பில் கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பள்ளி தாளாளா் பீட்டர்ராஜ் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பிரின்சஸ் முன்னிலை வகித்தாா். ஆசிரியை சுனிதா வரவேற்றாா். டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை பாா்வை மருத்துவா் குழுவினா் டாக்டா்கள் இந்திராசுந்தரி, தா்ஸன்ராஜ், ஹெப்ஸி, ராகுல்குமாா், ரெனிஷாபேபி, தஸ்னி, ஆகியோா் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தேவையான மாணவா்களுக்கு கண் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆசிரியா்கள் உமா, சாந்தி,முத்துமாரி, உள்ளிட்ட பெற்றோா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை ராஜம்மாள் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.