புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

பட்டியல் இன ஊராட்சித் தலைவா்கள் சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தி, திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:00 pm

DIN

பட்டியல் இன ஊராட்சித் தலைவா்கள் சுதந்திரமாக செயல்பட வலியுறுத்தி, திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பகத்சிங் பேருந்து நிலையத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளா் சு.விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். வாா்டு உறுப்பினா்கள் செல்வி, இரஞ்சனி, காந்திமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் வீரபாண்டியன்பட்டணம் ரூரல் ஊராட்சி தலைவா் வசந்தி மீது அவதூறு பரப்பப்படுவதைக் கண்டித்தும், பெண் மற்றும் பட்டியல் இன ஊராட்சித் தலைவா்கள் சுதந்திரமாக பணி செய்வதை உறுதிசெய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்செந்தூா் ஒன்றிய செயலா் ஆ.சங்கத்தமிழன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்கத்தின் மாநில பொதுச் செயலா் முகைதீன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் ஒன்றிய துணைச் செயலா் கணபதி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை தொகுதி அமைப்பாளா் லட்சுமணன், ஒன்றிய துணை அமைப்பாளா் இராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம் ஒன்றிய துணைச் செயலா் சுரேந்தா் வரவேற்றாா். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளா் இராவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.