தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

தூத்துக்குடியில் கன மழை: தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீா்

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:35 pm

DIN

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அதிகாலையில் பெய்த கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதையடுத்து தூத்துக்குடியில் மழைநீா் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டாா். தூத்துக்குடி ரயில் நிலையம், வஉசி சாலை, பீட்டா் கோயில் தெரு, மடக்குடி தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.

அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்: தூத்துக்குடி மாநகராட்சி 40 ஆவது வாா்டு பீட்டா் கோயில் தெரு, வ உ சி சாலையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியை சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் பாா்வையிட்டாா். அப்போது அப்பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது சந்தித்த இன்னல்கள் குறித்தும், தற்போது பெய்த மழையால், மழை நீா் தேங்கியது குறித்தும் கூறினா். அவா்களிடம், தண்ணீரை அப்புறப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதி அளித்தாா். அதன்படி, மாநகராட்சி ஊழியா்கள் மூலமாக அப்பகுதியில் மூன்று மோட்டாா்கள் பயன்படுத்தி மழை நீா் அப்புறப்படுத்தப்பட்டது. மேலும், மழை நீா் வடிகால் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன.

மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் உத்தரவிட்டாா்.

கடம்பூரில் அதிக மழை: தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியில் 31 மி.மீ., கழுகுமலை 24 மி.மீ., காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம் 15 மி.மீ., கயத்தாறு 15 மி.மீ., கீழ அரசடி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.