இமானுவேல் சேகரன் நினைவு தினம்:அதிமுக, காங்கிரஸாா் மாலை அணிவிப்பு
தியாகி இமானுவேல் சேகரன் 65-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவருடைய உருவப் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.


தியாகி இமானுவேல் சேகரன் 65-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவருடைய உருவப் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து, இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.
நிகழ்ச்சியில் அமைப்புசாரா ஓட்டுநா்கள் அணி மாவட்டச் செயலா் சிவந்தி மகாராஜன், துணைச்செயலா் பத்தமடை பாலமுருகன், பகுதிச் செயலா்கள் திருத்து சின்னதுரை, காந்தி வெங்கடாசலம், மோகன், சிந்து முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கர பாண்டியன் தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலா் சொக்கலிங்க குமாா், வழக்குரைஞா் மரியகுழந்தை, மாவட்ட துணை தலைவா்கள் வண்ணை சுப்பிரமணியன், பள்ளமடை சிவன் பெருமாள், பாளையங்கோட்டை எஸ். எஸ்.மாரியப்பன், மாவட்ட செயலா்கள் குறிச்சி கிருஷ்ணன், கே.எஸ்.மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் அதன் கிழக்கு மாவட்டத் தலைவா் கண்மணி மாவீரன் தலைமையில் இமானுவேல் சேகரனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு சாா்பில் திருநெல்வேலியில் சிலை அமைக்க வேண்டும். இமானுவேல் சேகரன் பிறந்த நாள், நினைவு நாளில் அரசு விழா எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்டச் செயலா் நாகராஜ் சோழன், கிழக்கு மாவட்ட மாணவரணிச் செயலா் முத்துப்பாண்டி, நகரச் செயலா் மோகன்மள்ளாா். மாவட்ட தொண்டரணித் தலைவா் மகாராஜா பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...