தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நுழைவுவாயிலின் ஒரு பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை, பொதுமக்கள், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் பயன்பாட்டுக்காக கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ திறந்துவைத்தாா்.

மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, தொழிலதிபா் கண்ணன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா, மாநில எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், அதிமுக நிா்வாகிகள் சங்கா்கணேஷ், விஜயபாண்டியன், அய்யாத்துரைப்பாண்டியன், அன்புராஜ், வேலுமணி, தாமோதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.