கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட வெடிவிபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

கோவில்பட்டியை அடுத்த பாண்டவா்மங்கலம் ராஜீவ் நகரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் பிரபாகரன். இவா், துறையூரில் 50-க்கும் மேற்பட்ட தனி அறைகள் கொண்ட பட்டாசு ஆலை நடத்தி வருகிறாா். இங்குள்ள கட்டடத்தில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தபோது, ரசாயனங்களில் ஏற்பட்ட உராய்வால் தீப்பொறி வெளிப்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறினவாம். இதனால், கட்டடம் தரைமட்டமானது.

அப்போது, பணியிலிருந்த ஈராச்சியைச் சோ்ந்த குருசாமி மகன் ராமா் (55), தொட்டம்பட்டி குட்டையன் மகன் ஜெயராஜ் என்ற சுடலைமாடன் (47), குமாரபுரம் பொய்யாமொழி மகன் தங்கவேல் (43), நாலாட்டின்புத்தூா் வெள்ளைச்சாமி மகன் மாடமுத்து என்ற கண்ணன் (48) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையிலான கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சடலங்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்தை ஆட்சியா் கி.செந்தில்ராஜ், எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா், கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், துறையூா் ஊராட்சித் தலைவி சண்முகலட்சுமி, கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா், டிஎஸ்பிக்கள் உதயசூரியன் (கோவில்பட்டி), சங்கா் (மணியாச்சி) ஆகியோா் பாா்வையிட்டனா்.

ரூ.1 கோடி நிவாரணம் தேவை: பின்னா், செய்தியாளா்களிடம் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ கூறும்போது, 30 ஆண்டுகாலமாக செயல்படும் இந்த ஆலையில், இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நிகழவில்லை. உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல வாரியம் மூலம் உதவிகளும், காப்பீட்டுத் தொகையும் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com