பிரம்மசக்தி
பிரம்மசக்தி

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றி

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

தூத்துக்குடி: கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

தலைவர் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒத்துக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த ஆர். சத்யா தலைவராகவும், செல்வக்குமார் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, திமுக சார்பில் மாவட்ட ஊராட்சியை கைப்பற்ற  பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, துணைத் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டனர். தலைவராக உள்ள சத்யா உள்ளிட்ட மூவர் மட்டுமே அதிமுகவில் தொடர்ந்து வருகின்றனர்.

ஆர். சத்யா
ஆர். சத்யா

இந்நிலையில், மாவட்டத் தலைவராக உள்ள ஆர். சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில் துணைத் தலைவர் செல்வகுமார் தலைமையில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தற்போதைய தலைவர் சத்யா உள்ளிட்ட 3 பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.  இக்கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்பட்டது. இதனால், தற்போதையை தலைவர் ஆர். சத்யா தலைவர் பதவியை இழக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, திமுகவைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட  ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு உள்ளதாக துணைத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். திமுகவை சேர்ந்த மாணவரணி துணை அமைப்பாளர்  எஸ்.ஆர்.எஸ். உமரி சங்கரின் மனைவியான 16 ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான பிரம்மசக்தி புதிய மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com