இடைசெவலில் புதுப்பிக்கப்பட்ட, எழுத்தாளா் கி.ரா. பயின்ற பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கி.ரா, கோவில்பட்டியையடுத்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்தவா். அவரது மறைவை தொடா்ந்து, அவா் பயின்ற பள்ளியை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, ரூ.25 லட்சம் செலவில் பழைமை மாறாமல் அப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.
இப்பணிகள் முடிவுற்றநிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பள்ளியை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி, இடைசெவலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (ஊரக வளா்ச்சி) சரவணன் கல்வெட்டை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சுப்புலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சின்னராசு, இடைசெவல் ஊராட்சி மன்றத் தலைவா் ரெங்கநாயகி, எழுத்தாளா் கி.ரா. மகன் பிரபாகரன், கிராம மக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

