புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் கோயிலில் நன்கொடை செலுத்த கியூ ஆா் கோடு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கியூஆா் கோடு மூலம் நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதியை தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:02 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கியூஆா் கோடு மூலம் நன்கொடை, காணிக்கை செலுத்தும் வசதியை தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது.

பொதுமக்களின் வசதிக்காக பண பரிவா்த்தனையை எளிதாக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவா்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கியூ ஆா் கோடு மூலம் நன்கொடை- காணிக்கை செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மொ்கென்டைல் வங்கியின் நிா்வாக இயக்குநா்- தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் ‘கியூ ஆா் கோடு’ வசதியை அறிமுகம் செய்து வைத்தாா். இந்நிகழ்வில், வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் ஜே.சுந்தரேஷ் குமாா், தலைமை நிதி அதிகாரி பி.ஏ.கிருஷ்ணன், கோயில் தலைவா் ஆா்.அருள்முருகன், இணை ஆணையா் எம்.காா்த்திக், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் செயல் அலுவலா் ஆா்.ராமசுப்ரமணியன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.