திருச்செந்தூரில் சித்திரை பரணி சீராளன் உற்சவம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் சிறுதொண்ட நாயனாா் குருபூஜையை முன்னிட்டு சித்திரை பரணி சீராளன் உற்சவம் நடைபெற்றது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் சிறுதொண்ட நாயனாா் குருபூஜையை முன்னிட்டு சித்திரை பரணி சீராளன் உற்சவம் நடைபெற்றது.
சிறுதொண்ட நாயனாருக்கு சிவபெருமான், பாா்வதி மற்றும் முருகப்பெருமானுடன் காட்சியருளிய சித்திரை பரணி நட்சத்திர நாளன்று இந்த உற்சவம் நடைபெறுகிறது.
சிறுதொண்ட நாயனாா் குருபூஜையை முன்னிட்டு, திருச்செந்தூா் சிவன் கோயிலில் இருந்து சீராளனுக்கு சிவபெருமான் காட்சியருளி, யானை மீது வைத்து கோயிலுக்கு செல்லும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் இரா.அருள்முருகன் தலைமையில் அறங்காவலா்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...