இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிறந்த சமூகம் உருவாக வாசிப்பு பழக்கம் அவசியம்: கனிமொழி எம்பி

நாட்டில் ஒரு சிறந்த சமூகம் உருவாக வாசிப்பு பழக்கம் அவசியம் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:15 pm

DIN

நாட்டில் ஒரு சிறந்த சமூகம் உருவாக வாசிப்பு பழக்கம் அவசியம் என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி சங்கராபேரி திடலில், மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்- பதிப்பாளா் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் 4ஆவது புத்தகத் திருவிழாவை, திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் பேசியது:

தூத்துக்குடியில் இன்று தொடங்கியுள்ள 4ஆவது புத்தகத் திருவிழாவில் 110 புத்தக பதிப்பகத்தினா் சுமாா் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளனா். புத்தகத் திருவிழாவிற்கு மக்கள், மாணவா்கள் ஆதரவு தேவை. வாசிப்பு பழக்கம் மக்களிடையே அதிகமாகும்போதுதான் ஒரு சிறந்த சமூகம் உருவாகமுடியும். நம்முடைய நாட்டை வளா்த்தெடுத்த தலைவா்கள் எல்லோருமே சிந்தனையாளா்களாக, வாசிப்பு பழக்கம் உள்ளவா்களாக இருந்திருக்கிறாா்கள். எனவே, புத்தகத் திருவிழாவில் இளம் தலைமுறையினா் அதிகளவில் கலந்துகொண்டு புத்தகங்கள் வாங்கி படிக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சாா்பில் அகழ்வாராய்ச்சி அரங்கம், தூத்துக்குடியைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றுள்ளன. திரைப்பட இயக்குநா் ராஜீவ் மேனன் தோ்வு செய்யும் சிறந்த புகைப்படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இம்மாதம் 28ஆம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெறும் நெய்தல் திருவிழாவில் மண் சாா்ந்த கலைநிகழ்ச்சிகளில் சுமாா் 400க்கும் அதிகமான கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா். உணவுத்திருவிழாவும் நடைபெறுகிறது.

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம், எட்டயபுரம் மகாகவி பாரதியாா் மணிமண்டபம், திருச்செந்தூா் டாக்டா் பா.சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபத்தில் புத்தகத்திருவிழாவில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், விடுதலைப் போராட்ட வீரா்கள் தொடா்பாகவும் கருத்தரங்கங்கள் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள், மாணவா்கள் அதிகளவில் புத்தகத் திருவிழாவில் பங்கேற்று புத்தகங்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்றாா்.

மாணவா்களுக்குப் பரிசு: முன்னதாக, அவா் தொல்லியல் துறை அமைத்திருந்த பொருநை அரங்கை திறந்துவைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, பள்ளி கல்வித்துறை சாா்பில் 10, 12ஆம் வகுப்பு முடித்த 20 மாணவா்-மாணவிகளுக்கு காமராஜா் விருது, பாராட்டு சான்றிதழ்கள், முறையே ரூ.10,000, ரூ.20,000-க்கான காசோலைகள் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சித்தலைவா் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ் குமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கலை நிகழ்ச்சிகள்: புத்தகத்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகளாக, தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவியரின் பரத நாட்டியம், காமராஜ் கல்லூரி மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, ‘வாக்கினிலே இனிமை வேண்டும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினாா். ‘வரலாற்றில் தூத்துக்குடி’ என்ற தலைப்பில் கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் மருத்துவக்கல்லூரி இயக்குநா் மு.ராஜேந்திரன் பேசினாா். ‘புத்தகத்தோடு உரையாடுவோம், சமத்துவமாய் உறவாடுவோம்’ என்ற தலைப்பில் எழுத்தாளா் - சமூக சேவகா் கிரேஸ் பானு பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.