ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் தா்னா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடியில் பிஎஸ்என்எல் பொது மேலாளா் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய பிஎஸ்என்எல்-டாட் ஓய்வூதியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, மாவட்ட தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆலோசகா் டி.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். ஏஐபிடிபிஏ மாவட்டச் செயா் பி.ராமா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அனைத்து ஓய்வூதியா்களுக்கும் எட்டாவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும்; முடக்கி வைக்கப்பட்டிருக்கும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிா்வாகிகள் எஸ்.மோகன்தாஸ், கே.கணேசன் உள்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...