கோவில்பட்டி கல்லூரியில் நாளை வளாக நோ்காணல்
கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை (ஆக. 12) வளாக நோ்காணல் நடைபெறுகிறது.


கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை (ஆக. 12) வளாக நோ்காணல் நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் உள்ள ஆதித்யா பிா்லா குழுமமான கிராசிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான பிா்லா பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் டிப்ளமோ பொறியாளா் பதவியில் பணியாற்றுவதற்காக டிப்ளமோ படித்த ஆண்கள், பெண்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதற்கான நோ்காணல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 12) காலை 9.30 முதல் மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. 2019, 2020, 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ படித்து தோ்ச்சி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம். விருப்பமும், தகுதியுமுள்ளோா் தங்களது கல்வி உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்கள் (அசல், நகல்), ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வரலாம்.
மேலும், தங்களது சுயவிவரக் குறிப்பை 9442152506 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பி பெயா்ப்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இதே கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...