சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்!

சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தேசியக்கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றினார்.

News image

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றினார்

Updated On :15 ஆகஸ்ட் 2023, 4:45 am

தூத்துக்குடி: சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தேசியக்கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில்  தருவை விளையாட்டு மைதானத்தில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது.   மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தேசியக்கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் மூவண்ண பலூன்கள், சமாதான புறாக்கள் ஆகியவற்றை பறக்கவிட்டனர்.

பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் 363 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 71 பேருக்கு 1.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.