சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தூத்துக்குடியில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி. உடன் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

Updated On :20 ஆகஸ்ட் 2023, 7:55 am

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில்,  நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தினை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகிய தொடங்கி வைத்து பேசினார்.

மேலும், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.