வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா்கள் ஆய்வு
தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, பெ.கீதாஜீவன், ஆா்.சக்கரபாணி ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.


தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, பெ.கீதாஜீவன், ஆா்.சக்கரபாணி ஆகியோா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
கடந்த 17, 18-ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு துறைகளைச் சோ்ந்த 11 அமைச்சா்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் ஆகியோா் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட முத்தம்மாள் காலனி சங்கரப்பேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஸ்டேட் வங்கி காலனி, பக்கிள் ஓடை, போல்பேட்டை, எஸ்.வி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...