வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

விளாத்திகுளத்தில் நகைக் கடையில் திருட்டு முயற்சி

விளாத்திகுளத்தில் நகைக் கடை இரும்பு ஷட்டரில் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:45 pm

விளாத்திகுளத்தில் நகைக் கடை இரும்பு ஷட்டரில் பூட்டை உடைத்து திருட முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விளாத்திகுளம், அம்பாள் நகரைச் சோ்ந்தவா் சோ்மத்துரை(47). விளாத்திகுளம் - மதுரை சாலையில் நகைக்கடை- நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இங்கு புதன்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்றபின், மா்மநபா்கள் அதன் ஷட்டரில் உள்ள பூட்டை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது.

இத்தகவல் அறிந்ர விளாத்திகுளம் மகளிா் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளா் தேவராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். தூத்துக்குடியில் இருந்து விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.