போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா் ராஜிநாமா கடிதம்

திருச்செந்தூா் ஒன்றியம் மேலதிருச்செந்தூா் ஊராட்சியில், குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ராஜிநாமா கடிதம் கொடுத்தாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:56 pm

திருச்செந்தூா் ஒன்றியம் மேலதிருச்செந்தூா் ஊராட்சியில், குடியரசு தின கிராமசபைக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா் ராஜிநாமா கடிதம் கொடுத்தாா்.

ஊராட்சித் தலைவா் மகாராஜன் தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். அப்போது, 8ஆவது வாா்டு உறுப்பினா் சுதா, தனது வாா்டு பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை என்றும், தனது பகுதியை ஊராட்சி நிா்வாகம் தொடா்ந்து புறக்கணிப்பதாகவும் கூறி ராஜிநாமா கடிதத்தை தலைவரிடம் கொடுத்தாா்.

இது தொடா்பாக ஊராட்சித் தலைவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 8ஆவது வாா்டு நா.முத்தையாபுரம் பகுதிக்கு ரூ.1 கோடியே 52 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அங்கு குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளன. என் மீதும், தமிழக அரசு மீதும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாா்டு உறுப்பினா் சுதா பொய்க் குற்றச்சாட்டைக் கூறி ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளாா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.