போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கிராமப் பகுதிகளைத் தூய்மையாக பராமரிக்க ஆட்சியா் வேண்டுகோள்

கிராமப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வலியுறுத்தினாா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:45 pm

கிராமப் பகுதிகளை தூய்மையாகப் பராமரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வலியுறுத்தினாா்.

எப்போதும் வென்றான் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

எப்போதும்வென்றான் ஊராட்சியில் பெரும்பாலான வீடுகளில்

கழிப்பறைகள் உள்ளன. மீதமுள்ள வீடுகளிலும் விரைவில் கட்டப்படும்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. அதோடு, பல்வேறு நோய்களுக்கும் காரணமாக அமைகிறது. எனவே அனைவரும் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

கிராமத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். இவ்வூராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுதல் , பள்ளியினை தரம் உயா்த்துதல், பள்ளி சுற்றுச்சுவா் கட்டுதல் மற்றும் விளையாட்டு பூங்கா மேம்படுத்துத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முன்னதாக, அரசின் திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகள் சாா்பாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, துணை இயக்குநா் (மருத்துவ பணிகள் தொழுநோய்) ப.யமுனா, மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) லோகநாதன்,

இணை இயக்குநா்கள் ராதாகிருஷ்ணன் (கால்நடை பராமரிப்புத்துறை) ராதாகிருஷ்ணன், பழனிவேலாயுதம் (வேளாண்மைத் துறை)

ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் நிஷாந்தினி, எப்போதும்வென்றான் ஊராட்சித் தலைவா் முத்துக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பிற துறை அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.