கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அருந்ததியா் மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்த வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா் 32 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட புதூா், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் உள்ள கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு
மயான வசதி செய்து தர வலியுறுத்தி தமிழ்ப்புலிகள் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். முன்னதாக, கட்சியின் மாவட்டச் செயலா் வீரபெருமாள் தலைமையில் ஜோதி நகரில் இருந்து கோட்டாட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாகப் புறப்பட்டனா்.
வக்கீல் தெருவில் அவா்கள் சென்று கொண்டிருந்தபோது, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
அதையடுத்து அப் பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா் வீரபெருமாள், துணைச் செயலா் பீமாராவ், செய்தித் தொடா்பாளா் கனியமுதன் மற்றும் 14 பெண்கள் உள்பட 32 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிஸாவில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
பாலிவுட்டில் சாய் பல்லவி! ஏக் தின் பட புதிய டிரைலர்!

திருக்குறள் அடிப்படையில் தவெக தேர்தல் அறிக்கை: வெளியிட்ட விஜய்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

