கழுகுமலை கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவற்றிற்கு 18 வகையான மூலிகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோயில் செயல் அலுவலா் காா்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளா்கள், திரளான பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். திருவிழா நாள்களில் தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். 10ஆம் திருநாளான பிப்ரவரி 5 ஆம் தேதி காலை 7 மணிக்கு சட்ட ரதத்தில் சுவாமி, கோ ரதத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். காலை 10 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறும்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com